Rajesuwer  PS
Product-Engineer
·
Creative Craftsman

காதல்-காமம்

🎵 Song available

வழிமேல் விழி - காதல்
வளைவில் விழி - காமம்

கையில் பூ - காதல்
பூவில் கை - காமம்

கண்கள் சந்திப்பில் பேசுவது காதல்
கட்டில் சத்தத்தில் மௌனம் காமம்

உள்ளம் சேர்வது காதல்
உடல் சேர்வது காமம்

உள்ளத்தின் நெருக்கம் காதல்
உடலில் இருக்கம் காமம்

ஆடை ஆபரணம் காதல்
அவையற்ற தருனமோ காமம்

அமைதி காதல்
வேகம் காமம்

அன்பு காதல்
ஆசை காமம்

[]